ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர்ராக்கெட் வெடித்து சிதறியது. அந்த வீடியோக்கள் உலக அளவில் வைரல் ஆகி வருகிறது.
மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் ஸ்பேஸ்எக்ஸ் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7 பரிசோதனை நடைபெற்றது. அப்போது, திடீரென அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் பூஸ்டர் வெடித்துச் சிதறியது.
இதுவரையில் 4 முறை இந்த பூஸ்டர் மாதிரிகள் விபத்தை சந்தித்திருக்கின்றன. இந்த ஆண்டு ஸ்டார் ஷிப் பணிகள் முடிவடையும் என எலான் தெரிவித்திருந்த நிலையில், இன்று பூஸ்டர் 7 மாதிரி வெடித்துச் சிதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..எலான் மஸ்க்கின் ஸ்டார் ஷிப் பூஸ்டர் மாதிரி பரிசோதனையின் போது வெடித்துச் சிதறிய வீடியோ உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.