மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் மகாலில் தென் மாவட்ட விவசாயிகளுக்கான யுனைடெட் அக்ரி எக்ஸ்போ எனும் நான்கு நாள் விவசாய கண்காட்சி துவங்கியது.
விவசாய கண்காட்சியினை வேளாண் துறை இணை இயக்குனர் சுப்புராஜ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பாக்யராஜ் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பனையூர் அழகு முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்க பொதுச்செயலாளர் லிங்க பாண்டியன் மற்றும் விவசாய அமைப்பு நிர்வாகிகள் கண்காட்சியில் கலந்து கொண்டனர். கண்காட்சியில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் தானியங்கி மின்னணு சாதனங்கள் மற்றும் இயற்கை விவசாயத்திற்கான இடுப்பு பொருட்கள் விவசாயத்தை மேம்படுத்தும் நவீன ரக உற்பத்தி உரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன. மேலும் இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட உணவு தானிய பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் அவற்றின் வகைகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது கண்காட்சியில் மதுரை சிவகங்கை விருதுநகர் ராம்நாடு தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாய சங்கங்கள் விவசாய அமைப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
