• Sat. Apr 26th, 2025

நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம்

ByP.Thangapandi

Jan 31, 2025

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை நினைவு கூர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருளானந்தர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பாக கண்காட்சி முகாம் 30.01.2025 வியாழக்கிழமை அன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள், வரைபடங்கள்,கண்கவர் மாதிரிகள், துண்டு பிரசுரங்கள், போக்குவரத்து குறியீடுகள் விளக்கங்கள், சிவப்பு பச்சை மஞ்சள் நிற சமிக்கை விளக்குகள் ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அருளானந்தர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் அபிராமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் ஒன்றிணைந்து கண்காட்சி முகாமை சிறப்பாக அமைத்திருந்தனர். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் அன்பரசு சே.ச, செயலர் அருட்தந்தை ஆண்டனி சாமி சே.ச கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஏ.எஸ். சுகந்தி, மோட்டார் வாகன காவல் ஆய்வாளர் உசிலம்பட்டி பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவது சீட் பெட் அணிவது நிதானமாக சாலையில் செல்வது போன்றவை பற்றியும் சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் அருள்சேகர் காவல் ஆய்வாளர், போக்குவரத்து காவல் துறை உசிலம்பட்டி, சௌந்தரபாண்டி காவல் சார்பு ஆய்வாளர், போக்குவரத்து காவல்துறை உசிலம்பட்டி ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.