திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
உடல்நலம் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் எனவும்,
சென்னை புறநகர் பகுதிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட பீடி, சிகரெட் விற்பனை செய்யும் சிறு குறு வியாபாரிகளை போலீசார் தாக்குவதாகவும், சாமானிய வியாபாரிகளை குறிவைத்து தாக்கும் தமிழக காவல்துறைக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அரசால் அனுமதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் காவல்துறை மற்றும் அதிகாரிகள் தொல்லை கொடுப்பதாகவும், அரசு அனுமதித்த பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என்றால் தயாரிப்பு நிறைவனங்களிடம் அரசு பேசி வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வதை நிறுத்த வேண்டுமே தவிர வியாபாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார் .
கர்நாடக மாநிலத்தில் 14000 வணிகர்களுக்கு வணிகவரித்துறை அனுப்பியுள்ள நோட்டிஸை எதிர்த்து வணிகர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், வியாபாரிகளுக்கு ஏற்படும் அத்துமீறல்கள், ரவுடிகள் தொல்லை போன்ற எந்த இடையூறுகளுக்குய் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். சிவகாசியில் அடிக்கடி நடைபெறும் பட்டாசு ஆலை விபத்துகளால் ஏற்படும்.
உயிரிழப்புகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும், தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி பட்டாசு ஆலைகளில் நவீன முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கேரி பேக்குகள் அதிகளவில் அண்டை மாநிலங்களில் இருந்துதான் வருவதாகவும், அதை அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும் என்றும், கேரிபேக் கொண்டு செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினாலே தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கேரி பேக்குகள் பயன்பாடு குறையும் என்றும், ஆனால் அதிகாரிகள் அதை செய்யாமல் வியாபாரிகளை பிடித்து அபராதம் விதிப்பது வேதனையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
வருகிற 2026தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக காங்கிரஸ் கட்சிகளுக்கு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் எங்களது கோரிக்கைகளை முறையாக கடிதமாக கொடுத்து அதை தங்களது தேர்தல் வாக்குறுதியில் சேர்த்து உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு தங்களது ஆதரவை அளிக்கப்போவதாக நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா தெரிவித்தார்.