• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பரபரப்பு! கலவரமான அதிமுக அலுவலகம் -வீடியோ

ByA.Tamilselvan

Jul 11, 2022

சென்னையில் பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்தார். ஆனால் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது


இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் போது, பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது.கதவை அடித்து உடைத்த ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன.
இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பரஸ்பரமாக கற்களை வீசித்தாக்க்கிக் கொண்டனர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கினர். கற்கள் தாக்குதலில் சிலருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டுள்ளது.