• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

ByN.Ravi

Mar 31, 2024

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயண
சாமிக்கு, வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய பகுதிகளில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் வீதி, வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு. காளிதாஸ் ஏற்பாட்டில், வடக்கு ஒன்றியத்
துக்கு உட்பட்ட விராலிப்பட்டி, செம்மினி பட்டி, குட்லாடம் பட்டி, ராமையம்பட்டி, பூச்சம்பட்டி, கச்சைகட்டி ஆண்டிப்பட்டி, கட்டக்குளம், சித்தாலங்குடி ,
சி புதூர், திருவாலவாயவாயநல்லூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன், மாணிக்கம், எம். வி .கருப்பையா , அம்மா பேரவை துரை தன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . வாடிப்பட்டி மு. கா. மணிமாறன் நன்றி கூறினார்.