• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

Sep 24, 2022

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மகிழம் மரக்கன்றை நட்டு பசுமை தமிழகம் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பை 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும். தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும். இயற்கையை காப்பது நம்முடைய இயல்பிலேயே உள்ளது. வளர்ச்சியை நோக்கி செல்லும்போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.