டிசம்பர் 13ஆம் தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் அதனை கோவில் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் (டோஸ்) செலுத்தியவர்கள் மட்டுமே 13.12.2021-ந் தேதி முதல் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கபட்டிருந்தது.
கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பக்தர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த அறிவிப்பினை சில நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.