

சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தென் சென்னை மாவட்டம் சார்பாக கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் கண்களை பாதுகாக்கும் பொருட்டு கூலிங்கிளாஸ்(கண் கவர் கண்ணாடிகள்) பேரமைப்பின் தலைவர் A.M. விக்கிரமராஜா வழங்கினார். வடபழனி காவல் நிலையம் அருகே உள்ள சிக்னலில் நடை பெற்ற இந்நிகழ்ச்சி வடபழனி(R8), கோடம்பாக்கம்(R2), அசோக் நகர்(R3), கேகே நகர்(R7), விருகம்பாக்கம்R8), ஆகிய ஐந்து காவல் நிலைய ஆண் மற்றும் பெண் போக்குவரத்து காவலர்களுக்கு சுமார் 45 கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
வடபழனி சைதாப்பேட்டை ரோடு வட்டார வியாபாரிகள் சங்கம் ஏற்பாட்டில் நடை பெற்ற இந் நிகழ்ச்சிக்கு தலைவர் M.சுடலைமுத்துசெயலாளர் T.செந்தில், பொருளாளர் அரிமா.தா.ரங்கன்,கவுரவதலைவர் PMJF.Lion.Dr.S.ஜாகீர்உசேன், மற்றும் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்அரிமா எம்.ஆர். பன்னீர்செல்வம், என்.பி.பாலன், நெல்லை நாடர் சங்கம் தசரதபுரம் A.T. கார்த்தீகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன் பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் வடபழனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாம் பெனட் கூறியதாவது:
இந்த கண் பாதுகாப்பு கண் கண்ணாடியை போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கிய வியாபாரிகள் சங்கத்தினருக்கும் அதன் நிறுவனத் தலைவர் ஏ.எம் விக்கிரம ராஜாவுக்கும் போக்குவரத்து காவல்துறையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து பேசிய ஏ.எம். விக்கிரம ராஜா மக்களை பாதுகாக்கும் முதல் பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது. அதுவும் போக்குவரத்து நெரிசலில் நமக்கு இடையூறு இல்லாமல் சரிசெய்யும் பணி இந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு உள்ளது அதனால் அவர்கள் வெயிலின் தாக்கம் பாதிக்கப்படாத வண்ணம் அவர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு கூலிங் கிளாசை வழங்குகின்றோம். இது முதல் கட்டம் தான் அடுத்தது மாநகர முழுவதும் உள்ள போக்குவரத்து காவல் துறையினர்க்குஇந்த கண்கவர் பாதுகாப்பு கண்ணாடி வழங்கப்படும் என்றும் கூறினார்.

