• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Dec 30, 2023

ஈரோடு – திருநெல்வேலி பயணிகள் விரைவு ரயிலை, செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஈரோடில் இருந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு பயணிகள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே மார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து ஈரோடிற்கு விரைவு ரயில் சென்று வருகிறது. ஈரோடில் இருந்து, திருநெல்வேலி வரை இயக்கப்படும் இந்த விரைவு ரயிலை அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என்று, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அகர்வால் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரையில் நீட்டிப்பு செய்தால், தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, ஈரோடு – திருநெல்வேலி விரைவு ரயிலை செங்கோட்டை வரையில் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக, பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் வெளியிட்டுள்ளார்.