• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில், சமத்துவ பொங்கல் விழா..!

ByP.Thangapandi

Jan 13, 2024
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து ஆடி பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்
அறுவடை பெருநாளான தை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாரம்பரிய வேட்டி சேலை அணிந்து சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடினர். 
இதே போன்று உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து வெகுவிமர்சையாக கொண்டாடினர். இன்று கல்லூரிக்கு வேட்டி சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மாணவ, மாணவிகள் ஆடல் பாடலுடன் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.