கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா
விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், தொழிலாளர்கள் , மாணவ, மாணவிகள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுமார் ஐம்பது இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட திமுக, விவசாய தொழிலாளர் அணி சார்பாக ஐயாயிரம் பொதுமக்களுக்கு சுமார் ஐம்பது இலட்சம் மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி சார்பாக ,தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் தமிழர் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது..
விழா ஏற்பாட்டாளரான மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் எம்.சிவராமன் தலைமையில்,
நடைபெற்ற இதில்,தி.மு.க.மாநகர் மாவட்ட தலைவர், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு நலத்திட்டங்களை வழங்கினார்..
இதே போல பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி நிதி உதவியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,
உள்ளிட்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு சுமார் ஐம்பது இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது…
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ,கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்,
மாநகராட்சி மேயர்,ரங்கநாயகி ராமசந்திரன் மேற்கு மண்டல தலைவர் தெய்வானை, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள்,கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், தளபதி இளங்கோ,
பொருளாளர் எஸ்.எம்.முருகன் மற்றும் வாசிம் ராஜா முபாரக் வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் 43 வது வட்ட கழக செயலாளர் .சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
