• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர்- காந்திக்கு ஈபிஎஸ் புகழாரம்

ByP.Kavitha Kumar

Jan 30, 2025

அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர் மகாத்மா காந்தி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 78வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காந்தியடிகளின் நினைவு நாளை போற்றும் வகையில் சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ” அறவழியில் ஆங்கிலேயரை வென்ற அமைதிப் புரட்சியாளர், சத்திய வழியை மானுட உலகத்திற்கு காட்டிய வழிகாட்டி, நம் இந்தியத் திருநாட்டின் கொள்கைத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், மகாத்மாவின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன். நாட்டின் சமத்துவத்திற்காக தன்னையே தியாகம் செய்த அண்ணல் காந்தியடிகளின் நினைவுநாளில், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த உத்தமர்கள் அனைவரையும் நினைவுகூர்வதுடன், தீண்டாமை துளியும் இல்லாத சமத்துவ நாடாக இந்தியாவைக் கட்டமைக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.