• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்…

Byகாயத்ரி

Sep 1, 2022

விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 307-ஆவது பிறந்த நாளான இன்று காலை 10.30 மணிக்கு, தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேய அரசை எதிர்த்து, நெஞ்சுரம்கொண்டு போரிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு பல வெற்றிகளை கண்ட சரித்திரம் போற்றும் மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 307வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவர்தம் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.