• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவையில் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

BySeenu

Nov 22, 2023

இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தினத்தை முன்னிட்டு, கோவையில் தொற்று நோய் குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் தின நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. வரும் முன் காப்போம்,தொற்று நோய்க்கு எதிராக போராடுவோம் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ராயல் கேர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் தலைவர் டாக்டர் சிவக்குமார், ஜி.கே.என்.எம்.மருத்துவமனையின் மருத்துவர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜ், பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்..
முன்னதாக கருத்தரங்கின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சத்திய மூர்த்தி,தற்போது மிகப்பெரும் சவாலாக உள்ள தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த கருத்தரங்கை நடத்தி வருவதாகவும், தற்போது காய்ச்சல் பாதிப்புகள் சிறிய அளவில் இருந்தாலும் மருத்துவர்களை கண்டு பரசோதிப்பது அவசியம் என குறிப்பிட்டார். குறிப்பாக தற்போது மழை மற்றும் தட்ப வெட்ப சூழ்நிலைகளால் தொற்று நோய்கள் அதிகம் பரவுவதாக தெரிவித்த அவர், இது குறித்து பொதுமக்கள் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.