• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அகரம் இப்போ சிகரம் ஆச்சு’: உறை கிணறுகள் கண்டுபிடிப்பு

By

Sep 16, 2021

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூா் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது .

இதனையடித்து, முதுமக்கள் தாழி, சுடுமண் முத்திரை, தந்தத்தினாலான பகடை, காதணிகள், உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள்,தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அகழாய்வு நடைபெறும் அகரம் பகுதியில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.