தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜாபர் பர்வேஸ் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை!
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியானது சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜாபர் பர்வேஸ் மற்றும் சிவகங்கை தெற்கு மாவட்ட தலைவர் முத்து பாரதி, சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டு வீரமங்கை வேலுநாச்சியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் காளையார் கோவில், மதகுபட்டி, மானாமதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சிவகங்கை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் ஆர்வமுடன் இளைஞர்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். முன்னாள் காளையார் கோவில் திமுக தெற்கு ஒன்றிய மகளிர் அணியில் இருந்த செல்வி மீனாள் நாச்சியார் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்து இந்நிகழ்ச்சியில் , தாமரைப்பாண்டி, கோபாலகிருஷ்ணன், சசிகுமார் ,மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட முன்னிலையில் ஏராளமானோர் நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் , பெண்கள் என பலரையும் அழைத்து வந்து கட்சியில் இணைய செய்துள்ளார். அதிக அளவில் அளவில் ஒரே நேரத்தில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதால் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
