• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

விஜய்,அஜித் பட வில்லனுக்கு நிச்சயதார்த்தம்:

By

Sep 6, 2021 , ,

அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’, விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ’அஞ்சான்’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தார்.

இவர் நடித்துள்ள ’காமாண்டோ’ படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இவரும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான நந்திதா மஹத்வானியும் சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நந்திதா மஹத்வானியும் இந்தி நடிகர் டினோ மோரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் . இதனையோட்டி வித்யூத்தை நந்திதா காதலிப்பதாக தெரிவித்தார்..