சென்னையில் இன்று தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி சைதாப்பேட்டை, அசோக் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. அசோக் நகர் பகுதியில் மருத்துவ உபகரணங்களை தயார் செய்யும் தனியார் நிறுவனத்தில் திடீர் சோதனை நடந்து வருகிறது.
மேலும், சைதாப்பேட்டையில் உள்ள இந்த நிறுவனத்தின் இயக்குநர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல, கோயம்பேடு ஜெயின் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திலும், நிர்வாக இயக்குநர் அலுவலகம் மற்றும் இல்லங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து விருகம்பாக்கம், சாலிகிராமம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இதற்கு பின்புலமாக அரசியல் பிரமுகர்கள் உள்ளார்களா என்பது சோதனையின் முடிவில் தான் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
