நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெச்சிகட்டி பகுதியில் 46/1 கெச்சிகட்டி மந்தையில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்ப்டடிருந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடுகளில் உள்ளவர்கள் வேலிகளை அமைத்து ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இதனை குந்தா வட்டாட்சியர் இந்திரா வருவாய் ஆய்வாளர் மணிமேகலை முன்னிலையில் குந்தா கிராம ஆய்வாளர் தினேஷ்குமார் உதவி கிராம அலுவலர் சங்கர் மற்றும் மோகன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதன் பிறகு இதனை அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு வேலி அகற்றப்பட்டது.





