• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிரம்ப் மீதான தடையை நீக்கினார் எலான் மஸ்க்

ByA.Tamilselvan

Nov 21, 2022

டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி ட்விட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது.இதனை தற்போது எலான்மஸ்க் நீக்கியுள்ளார்.
51.8 சதவீதம் பேர் டிரம்ப் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நீக்கினார். டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதள நிறுவனங்கள் டிரம்பின் கணக்குகளை முடக்கின.
இந்நிலையில், பெரும் தொகை கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள உலக பணக்காரர் எலான் மஸ்க், , டிரம்ப் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த அனுமதிக்கலாமா, வேண்டாமா..? என எலான் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். சுமார் ஒன்றரை கோடி பேர் இதில் பங்கேற்று வாக்களித்த நிலையில், 51.8 சதவீதம் பேர் டிரம்ப் மீண்டும் ட்விட்டரை பயன்படுத்த ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதன் மூலம் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.