• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ட்விட்டரை வாங்க தயங்கும் எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு

ByA.Tamilselvan

May 13, 2022

ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக தகவல் வெளியானது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த எலான் மஸ்க், அதனை கைப்பற்ற வேண்டும் என்ற தனது கோபத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்தபடும் என அறிவித்தார். மேலும் டூவிட்டரில் பணியாற்றும்ப்ராக் அகர்வால் உள்ளிட்ட பலரை வேலையிலிருந்து நீக்கபோவதாக தகவல் வந்தது. அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார்.
ட்விட்டர் மற்றும் மஸ்க் தரப்பில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடக்கத்தில் நிறுவனத்தை விற்க ட்விட்டர் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் விரும்பவில்லை. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளாவது:
‘‘44 பில்லியன் டாலர் மதிப்புள்ள மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டருடனான எனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் உண்மையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் அதனை உறுதி செய்யும் விவரங்கள் நிலுவையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது டூவிட்டரை வாங்க எலான்மஸ்க் தயங்குவதாக தெரிகிறது