தீபாவளி நெருங்கி வரும் சூழலில். குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் உள்ள சிறிய,பெரிய மற்றும் நடைபாதை கடைகளில் கூட,தேன் கூட்டில் தேன் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல். புதிய ஆடைகளை எடுக்க மக்கள் கூட்டம் காணப்பட்டது.

நாகர்கோவிலில் முக்கிய பகுதியான வேப்பமூடு சந்திப்பில் பல்லாண்டுகளாக செயல் படும் நல்லபெருமாள் ஜவுளி கடையின் பெரிய அளவுக்கான
மின் தூக்கி இல்லாமல். ‘தீப்பெட்டி’ அளவிலான மின் தூக்கியில் அதிக பட்சமாக 5 நபர்கள் மட்டுமே ஒரு நேரத்தில் பயன் படுத்த முடியும் என்ற நிலையில்.
நாகர்கோவில் நல்ல பெருமாள் ஜவுளி கடையில் நேற்று மாலை(அக்டோபர்16)ம் தேதி மாலை 6.30 மணி அளவில். கடையின் மின் தூக்கியில் பச்சிளம் குழந்தை,ஒரு சிறுவன்,ஒரு சிறுவன், மின் தூக்கியை இயக்கும் பணாயாளருடன்நான்கு பெரியவர்கள் என 8பேர் சிறிய மின் தூக்கியில் பயணித்த நிலையில் மின் தூக்கி இடையில் பழுதடைந்து நின்று விட்டது. மீன் தூங்கி கட்டிடத்தில் எந்த மாடி பகுதியில் நிற்கிறது என அடையாளம் காண முடியாத பகுதியில் மின் தூக்கி நிற்கிறது என்பதைக் கூட அடையாளம் காணமுடியாத நிலையில் மின் தூக்கியில் நின்ற மக்கள் ஓசையுடன் ஒலி எழுப்பியும், வெளியே நிற்பவர்களுக்கு கேட்காத நிலையில்.
மின் தூக்கி வருகைக்கு காத்து நின்றவர்கள். ஜவுளி கடை பணியாளர்கள் இடம் ஏன் மின் தூக்கி வெகு நேரம் தாள் தளத்திற்கு வரவில்லை என கேள்வி எழுப்பிய நிலையில் தான். கடையின் மின் தூக்கி பழுதடைந்து நிற்பது தெரிய வர
தீ அணைப்புத்துறைக்கு கடை நிர்வாகி புகார் தெரிவித்தார்.

நல்ல பெருமாள் ஜவுளி கடை மின் தூக்கியில் சிலர் சிக்கிய தகவல் காட்டுத் தீயாக நகரம் முழுவதும் பரவியது.இதற்கிடையே சம்பவம் இடத்திற்கு காவல்துறையினரும் வந்து விட்டனர். கடையில் நின்ற பொதுமக்கள் என பலரும் பரபரப்பான தவிப்பில் இருந்த நிலையில்.
தீ அணைப்பு படையினர் தொடர்ந்த முயற்சியில் 150 _ திக்,திக் நொடிகளுக்கு பின் மின் தூக்கியின் கதவுகள் திறக்கப்படும் சிறு குழந்தை, சிறுவர், சிறுமி என 8_பேரும் பத்திரமாக மின் தூக்கியைவிட்டு வெளியே வந்தனர்.
இந்த பரபரப்பான வேளையிலும் கடையின் அதிபர்கள் அங்கிருந்து’ எஸ்கேப்’ ஆகிவிட்டார்கள்.!? பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், கடையில் புத்தாடைகள் எடுக்க வந்த ஏனைய மக்கள். காவல்துறை யின் பெண் அதிகாரியிடம். நல்ல பெருமாள் ஜவுளி கடையின் அதிபர் எங்கே ஓடிப்போனார் என கேள்வி மேல் கேள்வி எழுப்பிய போது, காவல்துறை உயர் அதிகாரி கேள்வி எழுப்பியவர்களை அமைதிப் படுத்தினார்.
தீ அணைப்பு படையினர் உரிய நேரத்தில் மின் தூக்கியில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்டதால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.