• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி இனி தீ பிடிக்காது

ByA.Tamilselvan

Sep 14, 2022

கடந்த சில மாதங்களாக எலக்ரிக் வாகனங்கள் குறிப்பாக பைக்குகள் திடீரென் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக இருந்தது. இனி அப்படி தீபிடிக்காது என கோமாகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதைத் தவிர்ப்பதற்கான தீர்வு கோமாகி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபயர்ப்ரூஃப் (Fireproof) பேட்டரிகள் வடிவில் வந்துள்ளது. தங்களது நிறுவனத்தின் பேட்டரி அனைத்து வாகனங்களிலும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் லித்தியம்-அயன் ஃபெரோ பாஸ்பேட் (LiFePO4) ஃபயர்ஃப்ரூப் பேட்டரிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கோமாகி அறிவித்து உள்ளது.
கோமாகி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதன் புதிய EV பேட்டரியான LiFePO4 சாதாரண எலெக்ட்ரிக் டூவீலர் பேட்டரியை விட அதிக தீ எதிர்க்கும் திறன் (fire resistant) கொண்டது. LiFePO4 பேட்டரி செல்களில் அதிக இரும்பு உள்ளடக்கம் (iron content) இருப்பதால் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.