

இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது.இந்தக் கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம்பியும், பாஜக மாநில துணைத் தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அவருக்கு பின்னால், மாநில பாஜக பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி வந்தார்.அப்போது அவர், முன்னாள் நின்ற எம்பி சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவை,திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும், நெட்டிசன்களும் வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
