மதுரை மாவட்டம் சோழவந்தான் வடக்குறை ரதவீதி, வெள்ளாளர் உறவின் முறை சங்க நிர்வாகிகள் தேர்வு, வடக்கு ரத வீதியில் உள்ள வேளாளர் உறவின்முறை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாக குழு கூடிய ஆலோசனை செய்து தேர்வுக்கு பின்னர் தலைவராக சுகுமார்பிள்ளை, செயலாளராக சிவராஜன், பொருளாளராக சிங்கராஜ் மற்றும் நிர்வாக கமிட்டினர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் சால்வை அனைத்து மரியாதை செய்தனர். தொடர்ந்து உறவின்முறை உறுப்பினர்கள் நலன், எதிர்வரும் சித்திரை, வைகாசி திருவிழாக்களை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல நிகழ்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
