• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேர்தல் ஆணையர் தேர்வு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ByA.Tamilselvan

Mar 2, 2023

தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
விசாரணையின்போது, மத்திய அரசு அதிகாரியான அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற, மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்தல் ஆணையரை நியமிக்கும் விவகாரத்தில் சுதந்திரமான நடைமுறை தேவை என்றனர். அதற்காக ஒரு முன்மாதிரியான தேர்வு குழுவை உருவாக்குவது காலத்தின் தேவை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில்தான் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.