• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புதுவையில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

Byவிஷா

Mar 22, 2024

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதுவையில் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
புதுவை மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இளையோருக்கு தேர்தல் குறித்தும், வாக்குப்பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து, பாண்லே தரப்பில் கூறுகையில், “தேர்தல் நாள் வரை தினமும் பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்படும். சராசரியாக 1.5 லட்சம் பால் பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சிடப்படும்.
அதில், ‘தவறாமல் வாக்குப்பதிவு செய்யவும் மாவட்ட தேர்தல் அலுவலகம் புதுச்சேரி”, என அச்சிடப்படுகிறது. ‘வாக்களிக்க பணம், பொருள் வாங்குவது குற்றம்’, ‘தேர்தல் புகார்களுக்கு 1950’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இனி இடம்பெறும்” என்று தெரிவித்தனர்.