• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மூதாட்டிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை..,

ByKalamegam Viswanathan

Sep 23, 2026
 மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மூதாட்டிகள் திடீர் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை, விதவைத் தொகை, மற்றும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை ஆகியவை திடீரென ஒரு மாதத்திற்கு முன்பு அவர்களது வங்கி கணக்கில் நிறுத்தப்பட்டதால், பெரிதும் அதிர்ச்சி அடைந்த நிலையில்,

    இதற்கான விபரத்தை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கேட்டபோது, உங்களுக்கு வங்கி கணக்கு செல்லாது, தபால் நிலையத்தில் உங்களது பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கிய பின்பு தான் ,உங்களது பெயரில் பணம் வரவு வைக்கப்படும் என கூறியதை தொடர்ந்து, அதற்கான சேமிப்பு கணக்கை துவக்குவதற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் ஊழியர் ஒருவரால் கணக்கு துவக்கப்பட்டு வரும் நிலையில், அதனை செய்வதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தை மூதாட்டிகள் முற்றுகையிட்டனர்.
 
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பிரச்சனையும் இன்றி தங்களது வங்கி கணக்கில் அரசின் உதவித்தொகையை பெற்று வந்த நிலையில், தற்போதைய த வெ க அரசு பொறுப்பேற்ற பின்பு ,திடீரென உதவித்தொகை அனைத்தும் நிறுத்தப்பட்டது மூதாட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.