• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகையை வழங்கிய எல்காட் நிறுவனம்..!

Byவிஷா

Jan 23, 2024

தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகையான 7 கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 5000 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரை சந்தித்து, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வழங்கினார்.
(எல்காட்) 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான ரூ.7 கோடியே 77 லட்சத்து 91 ஆயிரத்து 5000க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (எல்காட்) 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது. அப்போது தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், செயல் இயக்குநர் அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.