• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்பு

ByA.Tamilselvan

May 20, 2022

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலகின் முதன்மை பணக்காரர்களுள் ஒருவர் எலான்மஸ்க்.ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டபல நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.சமீபத்தில் டூவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் உலகமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டவர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது.
எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.