• Sat. Apr 27th, 2024

திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…

Byகாயத்ரி

May 20, 2022

இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிய நிலையில் அரசியல் நெருக்கடியும் அங்கு ஏற்பட்டது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இலங்கை அரசுக்கு உலக வங்கியின் 160 பில்லியன் டாலர் கடன் பெரும் உதவியாக உள்ளது. இருந்தாலும் இலங்கை முதன்முறையாக திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பணவீக்க 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கும் என அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த கடன் அளவை மறு சீரமைக்கும் வரை இலங்கை அரசால் கடனுக்கான எந்த தொகையையும் திருப்பி செலுத்த முடியாது என கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். இலங்கை நாணயம் மற்றும் பொருளாதார நெருக்கடி இந்த மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உணவு மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு தேவையான அன்னிய செலவாணி இருப்பு கூட இல்லாமல் இலங்கை அரசு பறிதவித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *