• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய மறுப்பு

Byவிஷா

Apr 12, 2024

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் எனக் கூறியதுடன், ஒரு தபால் வாக்கு கூட பதிவு செய்ய மாட்டோம் எனவும் மறுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது. ஆனால் அதில் ஒரு ஓட்டைக்கூட பதிவு செய்யாமல் புறக்கணித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த ஏகனாபுரம் கிராம மக்கள், தபால் வாக்கு கூட பதிவு செய்யாமல், கிராமத்துக்கு வந்த தேர்தல் அதிகாரிகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் கட்ட தமிழ்நாடு திட்டமிட்டுள்ளத்து. இந்தத் திட்டத்திற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தை எதிர்த்து பல்வேறு வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
624வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்களின் இரவு நேர அறவழிப் போராட்டம் தொடரும் நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனர். தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வயதானவர்களிடம் சென்று வாக்களிக்க கூறினார். வயதானவர்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியதால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதைக் கண்டு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது. ஆனால் அதில் ஒரு ஓட்டைக்கூட பதிவு செய்யாமல் புறக்கணித்துள்ளனர். இந்த் தேர்தலில் இருந்து 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்குப்பதிவு செய்யும் முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி இருக்கிறது. அந்த வாய்ப்பையும் ஏகனாபுரம் மக்கள் புறந்தள்ளி இருப்பது குறிப்பிடத்தக்கது.