• Fri. Jan 17th, 2025

கண்மாயில் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு… போலீசார் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Dec 9, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சங்கரலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (கூலி தொழிலாளி) இவருடைய மூன்றாவது மகன் காந்தி பாண்டி வயது 14 நல்லமநாயக்கன்பட்டி மேல்நிலை நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காலை சோழபுரம் கண்மாய்க்கு கிராமத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் குளிக்கும் பொழுது எதிர்பாராமல் மடைபகுதியில் சிக்கி உயிரிழந்தான்.

உடன் குளிக்க சென்ற சிறுவர்கள் வீட்டிற்கு தகவல் கொடுத்து உறவினர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயனைனப்பு துறையினரும் மற்றும் உறவினர்கள் மடைப்பகுதியில் சிக்கியிருந்த காந்தி பாண்டியை சடலமாக மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த கீழராஜாகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.