• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஈதுல் பெருநாள் தொழுகை..,

Byமுகமதி

Mar 21, 2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட கிளைகள் சார்பாக 21-3-26 அன்று ஈதுல் பெருநாள் தொழுகை 28 இடங்களில் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர கிளைகள் 1,2,ஆலங்குடி,கறம்பக்குடி,முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் ,மேலத்தானியம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினகோட்டை, ராஜேந்திரபுரம்,கோட்டைபட்டினம்,வடக்கு அம்மாபட்டிணம் 1,2,ஜெகாதப்பட்டினம், கோபாலபட்டிணம்,ஆர்புதுப்பட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிபட்டிணம் கீரமங்கலம்,மேற்பனைகாடு,காசிம்புதுப்பேட்டை,P.r.பட்டிணம், கட்டுமாவடி ஆகிய கிளைகள் சார்பாக 28 இடங்களில் ஈகை திருநாள் தொழுகை தவ்ஹீத் திடல்களில் நடைபெற்றது.

இந்த சிறப்புத்தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு TNTJ மாவட்ட பேச்சாள தொழுகையில் ஒரு அங்கமான குத்பா எனப்படும் உரை மாவட்ட பேச்சாளர்கள் உறை நிகழ்த்தினார்கள்,

அவர் தன் உரையில் 30 நாட்கள் நோன்பிருந்தது இறையச்சத்தை அதிகரிப்பதற்கான ஒரு அழகிய பயிற்சி, வெறும் பசியோடும் தாகத்தோடும் இருந்ததோடு மட்டும் அல்லாமல் தவறான பேச்சுககளையும் நடவடிக்கைகளையும் விட்டு விலகி இருந்து நாம் எடுத்த பயிற்சி நம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்றார், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக்குறித்து கவலைப்படாமல் தங்களின் பொருளாதார , பிராந்திய
நலனுக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் போர் கண்டனத்திற்குரியது, உலக நலன் கருதி மற்ற நாடுகள் தலையிட்டு
இப்போரை உடனடியாக நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்,

வளைகுடா நாட்டில் பெருநாளை நிம்மதியாக கொண்டாட முடியாமல் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்காக நாங்கள் உளமாற
பிரார்த்திக்கின்றோம் என்று கூறினார்.

அதே போல் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் பாசிச, பிரிவினைவாத சக்திகளை மக்கள் புறக்கணித்து இந்தியாவினுடைய நீண்ட
கால நலனை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தன் உரையில் அறிவுறுத்தினார்.

ஏழை எளிய மக்களும் இப்பெருநாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் தொழுகைக்கு முன்னரே கட்டாயமாக கொடுக்க வேண்டிய
பித்ரா எனும் தருமத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கியவர்களாக ஆயிரக்கணக்கான மக்கள் இத்தொழுகையிலும் , அதன் பிறகான குத்பா உரையிலும்
கலந்து கொண்டார்கள்,

தொழுகை மற்றும் குத்பா உரைக்கு பிறகு பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாத வகையில் அழகிய முறையில் மக்கள் கலைந்து சென்றனர்.