• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா..,

ByE.Sathyamurthy

May 10, 2025

சென்னை பள்ளிக்கரணையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர். எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு. 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு சிறப்பாக பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை. சென்னை புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சி. ஆர். சூர்யாபிரபா ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. கந்தன். கலந்து கொண்டு வழங்கினார்.

நல திட்ட உதவிகளை வழங்கி கட்சியின் நிர்வாகிகளுக்கு. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில். பகுதி செயலாளர்கள் வி.குமார், ஜானகிராமன், பழனிவேல், மாவட்ட மகளிரணிசெயலாளர் செல்வராணி சுந்தர், பகுதி கழக துணை செயலாளர் சொக்கலிங்கம், 189 வது வட்ட கழக செயலாளர்கள் விஜயகுமார், ப்ரோமிஸ் அம்பேத்கார் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், அணைத்து அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மகளிர் அமைப்புகள். பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.