• Fri. Mar 29th, 2024

எடப்பாடி பழனிச்சாமி -முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி- புகழேந்தி பேட்டி

எடப்பாடி மன்னன் மகுடம் சூட்ட முடியாது, ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி.
எடப்பாடி மீதான கொடநாடு வழக்கு, ஊழல் வழக்குகள் விரைந்து விசாரணை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்தில் மனைவி முதலாமாண்டு நினைவு அஞ்சலி முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது, ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரை தவறாக வழிநடத்தி செல்வதாகவும், அதிமுக கட்சி, மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் பிசாசு கேபி முனுசாமி, அரசியல் பச்சோந்தி கே பி முனுசாமி எனவும் எடப்பாடி, பழனிச்சாமி அரசியல் ரீதியாக முடிவு கட்டும் வேலையை செய்து வருகிறார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் வி கே சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம், அவர் இதை பலமுறை தன்னிடம் கூறி வருத்தப்பட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள், அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற ஊழலுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நடைபெற்றுள்ளதாகவும், தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தற்காலிகம் என்று கூறி தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும், இரட்டை இலையை முடங்கினாலும் கட்சியே போனாலும் பரவாயில்லை சுயமாக நின்று எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளார்.
துரோகத்தின் உச்சம் அடைந்த எடப்பாடி இடம் இருப்பவர்கள் எடப்பாடிக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் நல்லது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு விஷயம் செய்தித்தாள்களில் கசிவு குறித்து கேட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி தான் அவர் மற்றும் தற்போதைய டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கைது செய்யப்பட வேண்டும் இதுபோன்று கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு அனைத்து விசயமும் கசிய தான் செய்யும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *