• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் பொருளாதார வறட்சி ஏற்பட்டுள்ளது : தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை

Byகுமார்

Dec 13, 2021

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பாக சுதேசி கொள்கை விளக்க மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுதேசி தொழிலை பாதுகாப்பது குறித்தும் சுதேசி தொழிலுக்கான வளர்ச்சி திட்டங்களை மத்திய மாநில அரசுகளிடமிருந்து பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார்

சுயதொழில் செய்பவர்களின் அடிப்படை உரிமையை ரத்து செய்து விட்டு அந்நிய வனிகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இந்தியாவின் பொருளாதாரத் தேக்கம் ஏற்படுவதுடன் பொருளாதார சீர்கேடு ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு அந்நிய வணிகத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதால் இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாமை பொருளாதார வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு சுதேசி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் சிறு குறு வணிகத்திற்கு மத்திய அரசின் ஜாமீன் இல்லாமல் கடனுதவி வழங்கும் திட்டத்தில் சுதேசிகளை அழைக்களிப்பதாகவும் அந்நிய வணிகர்களுக்கு முக்கியதும் அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.