• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மத்திய அரசு அலுவலகங்கள்.., 50சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிப்பு..!

Byவிஷா

Jan 4, 2022

ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேருடன் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


50 சதவிகிதம் பேர் வீடுகளிலிருந்தே பணிபுரிவார்கள் என அறிவித்துள்ளதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட்டுள்ளது. அலுவலகத்தில் அதிக கூட்டத்தை தவிர்க்க மத்திய அரசு ஊழியர்கள் வௌ;வேறு நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரும் வகையிலான நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் உள்ளவர்கள் அனைத்து நாள்களிலும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.