• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இசிஜி வழங்கல் ..,

ByS.Ariyanayagam

Oct 13, 2025

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காமதேனு சாரிட்டிஸ், ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து 32,000 மதிப்புள்ள இசிஜி (ECG Machine) மெஷின் வழங்கப்பட்டது.

காமதேனு சாரிடிஸ் நிர்வாக அலுவலர் சங்கர கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் அரியநாயகம், அப்துல் கலாம் சமூக நலஅறக்கட்டளை ஆலோசகர் பேராசிரியர் முருகானந்தம் ஒருங்கிணைப்பாளர்கள் கொரசின்னம்பட்டி,சதீஷ்குமார் ஆகியோர் மிஷினை மருத்துவரிடம் வழங்கினர்.

மருத்துவர் ரெங்கசாமி, சுகாதார ஆய்வாளர் முனியப்பன் செவிலியர்கள் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவை ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனரும் காமதேனு சாரிட்டிஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் மருதை கலாம், நிர்வாகிகள் ஜெயபால்சாமி, சரவணன், சாந்தினி,திருப்பதி ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.