• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவிலும் தொடரும் நிலநடுக்கம் -பொதுமக்கள் அச்சம்

ByA.Tamilselvan

Feb 26, 2023

துருக்கி,சிரியா நிலநடுக்கம் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படுவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, ஆந்திரா,தெலுங்கானா, டெல்லியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் நிடுநடுக்கம் தொடர்வதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ராஜ்கோட்டிற்கு வடமேற்கே 270 கி.மீ தூரத்திலும், 10 கி.மீ ஆழத்திலும் இன்று மதியம் 3.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். லேசான நில அதிர்வு என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.