• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்

ByA.Tamilselvan

Jan 27, 2023

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதியம் 12 மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 2 விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நில அதிர்வால் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள், மின்விசிறி, டிவி உள்ளிட்ட அனைத்து பொருள்களும் அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் நில அதிர்வு குறித்து கேட்டபோது பெரிய அளவில் உணரப்படவில்லை என்றும் சீஸ்மோகிராபியில் குறியீடுகள் காட்டவில்லை என்றும் தெரிவித்தனர். இருப்பினும், ஏற்காட்டில் நில அதிர்வின் காரணமாக வணிக வளாகங்கள் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வு உணர்ந்ததாகவும், வெடிச் சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.