லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லே மற்றும் லடாக் இரண்டும் நாட்டின் நில அதிர்வு மண்டலம் IV-ல் அமைந்துள்ளன. இதனால் இவை அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன. கார்கிலுக்கு வடக்கே 191 கி.மீ தொலையில் நிலநடுக்கம் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.