• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் சாயப்பட்டறை கழிவு

BySeenu

May 23, 2024

ரசாயன கழிவுகளுடன் நொய்யலாற்று தடுப்பணையில் இருந்து நுரைதள்ளியபடி வெளுயேறும் தண்ணீரால் நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நெய்யலாற்றில் தற்பொழுது நீர்வரத்து துவங்கியுள்ளது.

இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணை ஒருகாலத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நொய்யலாற்று நீர்வழி தடங்களை தூற்வாராததும், நீர்வழித்தட வழிதடங்களின் அருகில் செயல்பட்டுவரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கல் வழியாக நொய்யலாற்றில் கலக்கும் அசுத்த நீராலும் தற்பொழுது காளவாய் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நுறையுடன் வெளியேறிவருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்தொற்று பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.