• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால்.., சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024

ராஜபாளையம் நிர்வாகத்தின் அலட்சியத்தால் காந்தி கலை மன்றம் அருகே ஏற்பட்டுள்ள திடிர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையை விரைவில் சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை காந்தி கலை மன்றம் அருகே திடிர் பள்ளம் ஏற்ப்பட்டது. இந்த பள்ளத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் இராஜபாளையம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியாக காணப்படுகிறது நகராட்சி நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீர் செய்யாததால் பொதுமக்கள் பாதசாரிகள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழந்து கை, கால் உடைந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. பல அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், நடத்தினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினர் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலைதான் உள்ளது
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது..,
நகராட்சியால் இராஜபாளையத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்க்காகத்தான் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர். ஆனால் இராஜபாளையத்தில் மட்டும் போக்குவரத்து காவலர்கள் சாலையில் உள்ள குண்டும் குழியை நிரப்பும் பணியை செய்து வருகின்றனர். சம்மந்தபட்ட நகராட்சி நிர்வாகம் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து காவலர்களை அவர்கள் பணியை சிறப்பாக செய்ய சம்மந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.