• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு..

Byகாயத்ரி

Jul 23, 2022

அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் வட மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. மேலும் பல ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்து வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணிகள் டிக்கெட் கட்டண தொகை சுமார் ரூ.102.96 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.