• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் கனமழையால் மழைநீருடன் கலக்கும் கழிவுநீரால் மக்கள் அவதி..!

ByP.Thangapandi

Jan 9, 2024
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி மேலும் உசிலம்பட்டி நகர்பகுதியில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தொட்டப்பநாயக்கனூர், நக்கலப்பட்டி, உத்தப்பநாயக்கனூர், கணவாய்பட்டி, சீமானூத்து, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இதனால் உசிலம்பட்டி நகர் பகுதிகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எறிய விட்டு செல்கின்றனர்.
மேலும் உசிலம்பட்டியில் தேனி மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணியால்  சாலையின் ஓரங்களில் கழிநீர் செல்வதற்கு பலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.