தேவகோட்டையில் சாலையில் கண்டெடுத்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமியை டிஎஸ்பி சால்வை அணிவித்து பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ராம்குமார் என்பவர் தனது மகள் சிறுமி நிஷாந்தினியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்லும் பொழுது சாலையில் ஒரு பை கிடப்பதை கண்ட சிறுமி தன் தந்தையிடம் கூறியதை அடுத்து, ராம்குமார் அதனை எடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.
போலீசார் பிரித்துப் பார்த்ததில், அதில், ஒரு லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் இருந்துள்ளது.
போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்த நிலையில், நேர்மையாக நடந்து கொண்ட சிறுமியையும், அவரது தந்தையையும் தேவகோட்டை டிஎஸ்பி கெளதம் சால்வை அணிவித்து பாராட்டினார்.