சிவகங்கை மாவட்டம் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு, அஇஅதிமுக சார்பில் அம்மா பேரவை செயலாளர் இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இந்திரா நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அஇஅதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகரதுணைச் செயலாளர் மோகன் வட்டக் கழக செயலாளர்கள் கிருஷ்ணகுமார், மாரிமுத்து,முருகன், அழகர்பாண்டி புதுப்பட்டி செந்தில் குமார் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.