மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள பசும்பான் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதனைதொடர்ந்து உசிலம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி முன்னிலையில் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த், எஸ்ஐ மணிமொழி, கல்லூரி முதல்வர் பால்ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை தடுப்பு குறித்தும், போதை பொருள்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள்,அதனால் வரும் நோய்கள், மற்றும் சட்டவிரோத போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.